வியாழன், ஜனவரி 05, 2012

வைகுண்ட ஏகாதசி


வைகுண்ட ஏகாதசியன்று விரதமும் இருந்தால் 

நமக்கு நேரே சுவர்கத்தின் கதவு திறந்திருக்கும் 

என்கிறார்கள் பெரியோர்கள். 

வைகுண்ட ஏகாதசியன்று காலை 4 மணி முதல் 5 வ்ரை 

சுவர்க்க வாசல் திறந்திருப்பதாக ஒரு ஐதீகம்.
 
இதைப் பரமபதவாசல் என்றும் சொல்வதுண்டு. 

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர், ரத்னாங்கி அலங்காரத்துடன் 

அதாவது மாணிக்கம், மரகதம் பதித்த உடையுடன் 

தன் பரிவாரங்கள் சூழ 

ஆழ்வார்களுடனும்  சொர்க்கவாசல் வழியாக 

நுழைந்து வருகிறார்.

Host unlimited photos at slide.com for FREE!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்  
சொர்க்கவாசல் இன்று திறக்கப்ப‌ட்டது

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீ ரங்கத்தில் 

இன்று [05-01-2012] வியாழன்  சொர்க்கவாசல்  திறக்கப்ப‌ட்டது.

பகல் பத்து, ராப்பத்து, இயற்பா ஒன்று என 21  நாட்கள் நடை பெறும்.

பகல் பத்து- 

இந்த பத்து நாட்களும் , அரங்கன் அர்சுன மண்டபத்தில் 

ஆழ்வார்கள், ஆசாரியார்களுடன் எழுந்தருளுவார். 

பத்து நாட்களும், ஒரு திருமொழி பாசுரம் 

அரையர்களால்    அபிநயிக்கப்  படும். 

பூர்வாச்சாரியார்களில் முதல்வரான 

நாதமுனிகள் இப்பத்தை ஆரம்பிப்பதாக ஐதீகம். 

பெரியாழ்வார் அருளிய திருமொழி, 

ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி, 

குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழி, 

திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி 

ஆகிய மொழி பாசுரங்கள் பாராயணம் செய்யப்படுவதால், 

இதனை திருமொழி விழா என்பர். 

ராப்பத்து-

இவ்விழாவின்  முதல் நாள்   அதிகாலை 

வைகுண்ட ஏகாதசியும், சொர்க்க வாசல் திறப்பும் நடைபெறும். 

அன்று பெருமாள் ,மதுரை ராணி  மங்கமாள் கொடுத்த 

ரத்தன அங்கியை அணிந்து அருள் பாலிப்பார்.

முதலில் மணி மண்டபத்தில் எழுந்தருளுவார்.

அங்கிருந்து, பக்தர்கள் புடை சூழ, 

வாத்திய முழக்கங்களுடன் , 

வேதங்களும், பாசுரங்களும் ஓத, 

சொர்க்க வாசல் எனப்படும் வைகுண்ட வாசல் 

வழி எம்பெருமான் வெளி வருவார். 

அதற்கு முன், வாசலுக்கு பூஜை செய்து, 

ஆரத்தி காட்டுவார்.

பெருமாள் பின்னால் 'ரங்கா; ரங்கா என 

கூறியபடி பக்தர்களும் சொர்க்க வாசல் 

வழியே நுழைந்து வருவார்கள். 

இம்மண்டபத்தின் அடியில்   விரஜா நதி ஓடுவதால்,

பக்தர்கள் அதில் நீராடி சொர்க்க வாசல் வழியாக 

 பரம பதம்  செல்வதாக  ஐதீகம். 

வைகுண்ட ஏகாதசி   இரவிலிருந்து 

ராப்பத்து விழா ஆரம்பமாகிறது  .

இது தினமும் இரவில் நடைபெறும். 

நம்மாழ்வார் வந்து 

திருமங்கை ஆழ்வாரையும், 

மதுரகவி ஆழ்வாரையும் 

திருவரங்கத்தில் எழுந்தருளிச் செல்வார்.

பெருமாள் முன் சமஸ்கிரத வேதத்துடன், 

தமிழ் வேதமான திருவாய் மொழி பிரபந்தம் 

பாடப்படுவதால் இது 

திருவாய்மொழி விழா  எனவும் சொல்லப்படுகிறது.

ஏழாம் நாள் கைத்தல சேவையும்,

எட்டாம் நாள் நம்மாழ்வார் மோட்சமும் 

நடை பெறும். 

வைகுண்ட ஏகாதசி முதல் ஏழுநாட்கள் 

முத்தங்கி அணிந்து சேவை சாதிப்பார்.

எட்டாம் நாள் பெருமாள் 

மோகினி அலங்காரத்துடன் காட்சி அளிப்பார்.

நம்மாழ்வார் மோட்சத்திற்காக

வைகுண்ட வாசல் திறந்ததை 

நினைவு கூறவே வைகுண்டஏகாதசியன்று 

பரமபத வாசல் ஒவ்வொரு வருடமும் 

திறக்கப்படுகிறது.

பதினோராம் நாள், இயற்பாவை அமுதனார் 

மூலம் சேவித்து, சாற்று முறை நடை பெறும்.

05-01-2012 அன்று அதிகாலை 

ஸ்ரீரங்கத்தில்   சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

பெருமாள் ரத்னஅங்கி, பாண்டியன் கொண்டை.  

கிளி மாலையுடன் பல்வேறு ஆபரணங்கள் 

அணிந்து காட்சி அளித்தார்.



 4.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப் பட்டது.  

அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

பின்னர் திருக்கொட்டகை அடைந்து  சாதரா மரியாதையை ஏற்றார். 

பிறகு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை அடைந்து 

அங்கு நள்ளிரவு12மணிவரை வீற்றிருந்து 

பக்தர்களுக்கு மீண்டும் அருள்பாலிக்கிறார். 

ஸ்ரீநம்பெருமாள் புறப்பாட்டைத் தொடர்ந்து 

அதிகாலை 4.30 மணிமுதல் இரவு 10 மணிவரை 

சொர்க்கவாசல் திறந்தே இருக்கும். 

பக்தர்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை 

கருவறையில் முத்தங்கி சார்த்தப்பட்டுள்ள 

பெரிய பெருமாளை தரிசித்துவிட்டு 

சொர்க்க வாசல் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 

இந்த விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் 

கடந்த 29ந் தேதி தொடங்கியது. 

முதல் நாளன்று காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 

அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

பகல்பத்து திருமொழி நிகழ்ச்சியின் போது 

நம்பெருமான் மூலஸ்தானத்தில் இருந்து 

தலையில் சவுரிக்கொண்டை, நெற்றியில் கஸ்தூரி திலகமிட்டு,

 ரத்தின கற்கள் பதித்த கைகவசமும், திருமார்பில் தங்கக்காசுமாலையும், 

வைரமணி மாலையும் உட்பட பல திருவாபாரணங்கள் அணிந்து 

ஆழ்வார்கள் ஆச்சாரியார்களுடன் 

காலை 6.30 மணிக்கு புறப்பட்டு 

பகல்பத்து மண்டபமான அர்ச்சுன மண்டபத்திற்கு

 7.15 மணிக்கு வந்து சேர்ந்தார். 

அங்கு நம்பெருமாள் முன்னர் அரையர்கள் 

திருப்பல்லாண்டு பாசுரங்களை அபிநயத்துடன் பாடி விளக்கினார்கள்.

அதன் பின்னர் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை 

உபயக்காரர்கள் மரியாதையுடன், 

பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். 

6.15 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 

உபயதாரத்தாரர்கள் மரியாதை ஆன பிறகு 

இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.












4 கருத்துகள்:

  1. அமிர்தமாய் வர்ஷித்த
    அருமையான பகிர்வு..
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.இதோமுகவரி-http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_11.html?showComment=1389400067941#c4442535171104740770

    --------------------------------------------------------------------------------------------------------------------------
    குறிப்பு- வலைத்தள உறவுகள் கேட்டதற்கு அமைவாக
    தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள் (காலம் நீடிக்கப்பட்டுள்ளது.) பதிவர்கள் தங்கள் கட்டுரைகளை எழுதி அனுப்பலாம் மேலும் விபரங்களுக்கு..இங்கே-https://2008rupan.wordpress.com
    http://tamilkkavitaikalcom.blogspot.com/ இந்த இரண்டு வலைப்பூக்களில் விபரம் உள்ளது.
    பதக்கங்கள்+சான்றிதழ் அள்ளிச்செல்லுங்கள்.......
    --------------------------------------------------------------------------------------------------------------------------------

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம். உங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி. வலை சரத்தில் வெளி யிட்டதற்கு மிக்க நன்றி.உங்களைப் போன்றவர்களின் ஆதரவுதான் என்னை எழுத தூண்டுகிறது. உங்களின் வலைதளங்களைப் பார்த்தேன். மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு